கேரளா - கர்நாடகா வந்த செவிலியர் மாணவிகள்: 27 பேருக்கு கொரோனா பரிசோதனை
செவிலியர் கல்லூரி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த 27 மாணவிகள் ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேர்வு எழுதுவதற்காக கேரளாவில் இருந்து ஹாசனில் உள்ள கல்லூரிக்கு திரும்பினார். கேரளாவில் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதால் அங்கிருந்து தேர்வு எழுதுவதற்காக வந்திருந்த 27 மாணவிகளும் ஒரே இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில் 27 பேரில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story