வெள்ளி வென்ற ரவிக்குமார் தாஹியா - குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரவிக்குமார் தாஹியாவை எண்ணி, ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கடினமான சூழல்களை கடந்து ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்று இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், ரவிக்குமார் தாஹியா மிகச்சிறந்த மல்யுத்த வீரர் என்றும், மன வலிமை மிக்கவர் என்றும் பாராட்டி உள்ளார்.
Next Story