"கர்நாடகாவுக்கு செல்ல கட்டுப்பாடுகள்"; "மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு விரோதமானது" - கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல, விதித்துள்ள கட்டுப்பாடுகள் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு விரோதமானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவுக்கு செல்ல கட்டுப்பாடுகள்; மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு விரோதமானது - கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு
x
கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல,  விதித்துள்ள கட்டுப்பாடுகள் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு விரோதமானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பயணிகள் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றும் சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு நிபந்தனை விதித்துள்ளது. மேலும், மங்களூரிலிருந்து காசர்கோடு உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தையும் தடை செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய பினராயி விஜயன், மாநில எல்லைகளை மூடக்கூடாது என ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து கர்நாடக டிஜிபிக்கு, கேரள டிஜிபி தெரிவித்துள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்