அத்தியாவசிய பாதுகாப்பு சேவை தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது

மாநிலங்களவையில் கடும் அமளிகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் அத்யாவசிய பாதுகாப்பு சேவைகள் மற்றும் காற்றுத்தர மேலாண்மை ஆணைய மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தியாவசிய பாதுகாப்பு சேவை தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது
x
பிற்பகல் மாநிலங்களவை கூடியதும் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. அரசால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடவடிக்கையில் ஈடுபடுவதை இந்த மசோதா தடை செய்கிறது.  அரசின் உத்தரவை மீறி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், பணி நீக்கம் அல்லது அபராதம் விதிக்கவும் மசோதாவில் இடம் உள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தை தூண்டும் நபருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கவே அத்தியாவசிய பாதுகாப்பு சேவை  மசோதா கொண்டு வரப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மசோதாவின் மூலம் பாதுகாப்பு துறை ஊழியர்களின் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை பறிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். திமுகவின் சார்பில் பேசிய சண்முகம் இந்த மசோதாவை தற்போது கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். எதிர்கட்சியினருக்கு பதிலளித்து பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்யாவசிய பாதுகாப்பு சேவை சட்டம் ஓராண்டுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்றார்.இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்