ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இழப்பு - 4 ஆண்டுகளில் ரூ.29,000 கோடி செலவு

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் வருவாயை விட கூடுதலாக 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இழப்பு  - 4 ஆண்டுகளில் ரூ.29,000 கோடி செலவு
x
மக்களவையில் ஏர்-இந்தியா விமான போக்குவரத்து குறித்து திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் விகே சிங் பதிலளித்து பேசினார். கடந்த 4 ஆண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனம் மூலம் 90 ஆயிரத்து 16 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும்,  ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 15 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2017-18ம் நிதியாண்டில் 23 ஆயிரத்து 900 கோடி ரூபாயும், 2018-19 ம் நிதியாண்டில் 26 ஆயிரத்து 430 கோடி ரூபாயும்,  2019-20 ம் நிதியாண்டில் 27 ஆயிரத்து 546 கோடி ரூபாய் என மொத்தமாக 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் 29 ஆயிரம் கோடி ரூபாய், 34 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் 36 ஆயிரம் கோடி ரூபாய் என ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனால் ஏர்-இந்தியாவின் வருமானத்தை விட கூடுதலாக கிட்டத்தட்ட 29 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேநேரம் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்திய விமானங்களுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாயும், இந்திய விமான நிலையங்களுக்கு மூவாயிரத்து 400 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சகம் கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்