"கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது" - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்

ராணுவத்தினர் மீது கல்லெறிதல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்
x
ராணுவத்தினர் மீது கல்லெறிதல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ராணுவத்தினர் மீது கல்லெறிவது, வன்முறையை கையிலெடுப்பது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிகையில் ஈடுபடுவோருக்கு அரசு வேலை மறுக்கப்படுவதுடன்  வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தேவைப்படும் பாஸ்போர்ட் கிளியரன்ஸ் மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பாகிஸ்தானிற்கு செல்லும் காஷ்மீர் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து ஜம்மு காஷ்மீர் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்