சர்ச்சையில் சிக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் - பெகாசஸ் உருவாக்கிய NSO நிறுவனம் மீது விசாரணை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை உருவாக்கிய NSO நிறுவனத்தின் சேவையை சில நாடுகள் ரத்து செய்துள்ளன.
சர்ச்சையில் சிக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் - பெகாசஸ் உருவாக்கிய NSO நிறுவனம் மீது விசாரணை
x
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை உருவாக்கிய NSO நிறுவனத்தின் சேவையை சில நாடுகள் ரத்து செய்துள்ளன. இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் என்ற மென்பொருள் இந்தியாவில் அரசியல்  தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என 40க்கும் மேற்பட்டோரின் செல்போன் தகவல்கள் ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்தது. இந்த பிரச்சனை உலக நாடுகளிலும் வெடிக்க இஸ்ரேல் அரசுக்கும், பெகாசஸை இயக்கும் NSO நிறுவனத்திற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் NSO நிறுவனத்துடன் பெகாசஸ் சேவையை பெற ஒப்பந்தம் மேற்கொண்ட சில நாடுகள் அதனை ரத்து செய்துள்ளன. இதனிடையே NSO நிறுவனத்தின் மீதான தவறான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை இஸ்ரேல் அரசு மேற்கொண்டுள்ளது. NSO  நிறுவங்களுக்கு சென்ற இஸ்ரேல் அதிகாரிகள் பெகாசஸ் புராஜெக்டின் வரைமுறைகளையும், விதிமீறல்களையும் கேட்டறிந்தனர். அப்பொழுது, தவறான நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக NSO நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்