தொடர் அமளியில் ஈடுபடும் எதிர்கட்சி - உறுப்பினர்கள் மீது சபாநாயகர் அதிருப்தி

மக்களவைக்கு பதாகைகளுடன் வந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன், பேப்பரை கிழித்தெறிந்ததால் இன்றும் அவை நடவடிக்கை முடங்கியது.
தொடர் அமளியில் ஈடுபடும் எதிர்கட்சி - உறுப்பினர்கள் மீது சபாநாயகர் அதிருப்தி
x
மக்களவைக்கு பதாகைகளுடன் வந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் 
சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன், பேப்பரை கிழித்தெறிந்ததால் இன்றும் அவை நடவடிக்கை முடங்கியது. 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும், சபாநாயகரை சூழந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் பெகாசஸ் குறித்து கேள்வி எழுப்பி பேப்பரை கிழித்து எரிந்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட, உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என சபாநாயகர் எச்சரித்தார். அதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சௌத்ரி, மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் எதிர்கட்சியினரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இரு தரப்பினரும் கூச்சலிட , மக்களவை அரைமணி நேரம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர், 11. 30 மணியளவில் மீண்டும் அவை கூடியதும் பேசிய ஓம்பிர்லா, அவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி கூச்சலிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்