"பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் உத்தரவு
பொது இடங்களிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதை தடுக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது இடங்களிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதை தடுக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் வீடற்றவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் மறுவாழ்வு திட்டங்களை அளிக்கக் கோரியும், தடுப்பூசி செலுத்த கோரியும் டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்தமனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. அப்போது பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ஏழ்மை மட்டும் இல்லையென்றால் யாரும் பிச்சை எடுக்க விரும்ப மாட்டார்கள் என்ற கருத்தையும் பதிவிட்டனர் மேலும் இந்த பொதுநல மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Next Story