கார்கில் போரின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் - டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி
கார்கில் போரின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்ததன் விளைவால் கார்கில் பகுதியில் போர் மூண்டது.
கார்கில் போரின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்ததன் விளைவால் கார்கில் பகுதியில் போர் மூண்டது. மே 3-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 26-ம் தேதி வரை தொடர்ந்த இந்த போரில், 500-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். போரின் இறுதியில் எல்லைத்தாண்டிய எதிரிகளை வீழ்த்தி இந்தியா வெற்றிவாகை சூடியது. இந்தியாவின் வெற்றியோடு போர் நிறைவடைந்த ஜூலை 26-ஆம் தேதியானது, ஆண்டுதோறும் கார்கில் போர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.இந்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்றற கார் போர் நினைவு தின நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவத்தினர் பங்கேற்றனர். லடாக் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாரமுல்லா பகுதியில் உள்ள நினைவிடத்திற்கு சென்று கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் நினைவு தினம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "அவர்களின் தியாகங்களை நாம் நினைவில் கொள்கிறோம்" எனவும், "அவர்களின் வீரம் நமக்கு நினைவிருக்கிறது" எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Next Story