விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்.. 3 காவல்துறை மேலாளர்கள் பணி நீக்கம்

விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்.. 3 காவல்துறை மேலாளர்கள் பணி நீக்கம்
விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்.. 3 காவல்துறை மேலாளர்கள் பணி நீக்கம்
x
விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்.. 3 காவல்துறை மேலாளர்கள் பணி நீக்கம்

கேரளாவில் விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 3 சுங்க இலாகா அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இந்தியாவிலேயே கேரளாவில் உள்ள விமான நிலையங்கள் வழியாக பல்வேறு நாடுகளுக்கு தங்கம் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து தங்கத்தை வெளியே  கொண்டு வர, விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகளே, கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் கடந்த  2019ம் ஆண்டு ஆகஸ்ட் 19ல் கண்ணூர் விமான நிலையத்தில் நான்கரை கிலோ தங்கத்தைக் கடத்திய 3 பேரை சுங்க இலாகாவினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கண்ணூர் விமான நிலைய சுங்க இலாகாவில்  பணிபுரிந்த ரோகித் சர்மா, சாகேந்திர பஸ்வான் மற்றும் கிஷன்குமார் ஆகிய 3  காவல்துறை மேலாளர்கள் இந்த கடத்தல் கும்பலுக்கு உதவியது தெரியவந்தது. குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 3 பேரும்  சில மாதங்களுக்கு முன்பு பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்நிலையில், சுங்க இலாகா ஆணையர், 3 அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்