பெட்ரோல், டீசல் -மத்திய அரசு வரி எவ்வளவு? நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்

பெட்ரோல், டீசல் -மத்திய அரசு வரி எவ்வளவு? நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்
x
பெட்ரோல், டீசல் -மத்திய அரசு வரி எவ்வளவு? நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு சார்பாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 32 ரூபாய் 90 காசும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாய் 80 காசுகள் கலால் வரி உட்பட இதர வரிகள் விதிக்கப்படுவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார்.மக்களைவையில் நாடாளுமன்ற உறுப்பினர் கும்பகுடி சுதாகரன் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு சார்பாக எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், கடந்த  2015 ஆம் ஆண்டு பெட்ரோலுக்கு 17 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாய் வரியாக விதிக்கப்பட்டதாக கூறினார். மேலும், கடந்த ஒன்றாம் ஆம் தேதி முதல் பெட்ரோலுக்கு 32 ரூபாய் 90 காசும், டீசலுக்கு 31 ரூபாய் 80 காசுகள் வரி விதிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்