கோவிஷீல்ட் தடுப்பூசியும் ஐரோப்பிய ஒன்றியமும்
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அங்கீகாரம் அளிக்காததால், கோவிஷீல்ட் செலுத்தியவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அங்கீகாரம் அளிக்காததால், கோவிஷீல்ட் செலுத்தியவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.பிரிட்டனின் அஸ்ரா ஸெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில் பூனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில், கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்து வருகிறது.அஸ்ட்ரா ஸெனிகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் கட்டுப்பாடு ஆணையம், இதுவரை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை.கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெற தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் முழுமையாக சமர்பிக்கவில்லை என்றும், பூனேவில் உள்ள தடுப்பூசி உற்பத்தித் தொழிற்சாலையின் உற்பத்தி முறைகள் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் சமர்பிக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் கட்டுப்பாடு ஆணையம் கூறியுள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற ஒரு சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனிப்பட்ட முறையில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்திருந்தாலும், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு இதர நாடுகளுக்கு கோவிஷீட் செலுத்தியவர்கள் செல்ல தடை நீடிக்கிறது.சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தொழிற்சாலையை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளதால், அதன் கோவேக்ஸ் திட்டத்திற்கு கோவிஷீல்ட் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story