லடாக்கில் 100 % முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இந்தியாவில் முதல் யூனியன் பிரதேசமாக லடாக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
லடாக்கில் 100 % முதல் டோஸ் செலுத்தப்பட்டது
x
இந்தியாவில் முதல் யூனியன் பிரதேசமாக லடாக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. வடக்கு எல்லை யூனியன் பிரதேசமான லடாக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரதேசமாக இருந்தாலும், சீரற்ற வானிலை, மலைப்பாங்கான இடங்கள், சாலை வசதியில்லாத மிக நீண்ட தொலைவில் தனியாக அமைந்திருக்கும் கிராமங்கள் போன்ற அம்சங்கள் சுகாதார பணியாளர்களுக்கு சவாலாக அமைந்தது. இந்த சவால்களையும் தாண்டி மருத்துவ உபகரணங்களுடன் நீண்ட தொலைவு நடந்துச் சென்று சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பாராட்டத்தக்க பணியை மேற்கொண்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்