கனமழை காரணமாக கடும் வெள்ளம் - சேறுடன் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

இமாச்சலபிரதேச மாநிலத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கடும் வெள்ளம் - சேறுடன் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
x
இமாச்சலபிரதேச மாநிலத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலபிரதேச மலைப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக நேத்ராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாக்சுனாக் நகர், தர்மசாலா பகுதியில் கனமழையின் தாக்கம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சேறுடன் செந்நிறத்தில் கரைபுரண்டோடிய வெள்ளம் நகருக்குள் புகுந்து, சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து செல்லப்பட்டன. ராம்பூர், ஜாக்ரி, சிம்லா செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. கனமழை வெள்ளத்தால், தர்மசாலா பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்