பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.கடற்கரை நகரான பூரியில், 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவர்களாக உள்ள பாலபத்ரா, ஜெகந்நாதர், சுபத்ரா ஆகிய மூவரும் புதிய தேரில் அமர்ந்து நகரை வலம் வருவர். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று புதிய தேர்களுக்கும் ஆயிரத்து 100 மீட்டர் அளவிலான வண்ண மயமான துணிகள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறும் நிலையில், வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வர். இந்நிலையில், கொரோனா பரவல் அச்சத்தால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தொடர்ந்து 2வது வருடமாக தேரோட்ட நிகழ்வு பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
Next Story