இன்றும் நாளையும் கேரளாவில் முழு ஊரடங்கு - அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி

கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் கேரளாவில் முழு ஊரடங்கு - அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி
x
கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் முழு ஊரடங்கு விதிகப்பட்டுள்ளது. உணவகங்களில் ஆன்லைன் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி, பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காய்கறிகள், பழங்கள், இறைச்சிக் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதியுடன் கட்டுமான பணிகள் நடைபெறலாம் எனவும், பல்கலைக் கழக தேர்வுகளில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கொரோனா மதிப்பீடு செய்வதற்கு துறைசார் மறு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்