கேரளாவில் இதுவரை 15 பேருக்கு சிகா வைரஸ் - பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் பாதிப்பு

கேரளாவில் மேலும் 14 பேருக்கு சிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுகாதார ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் இதுவரை 15 பேருக்கு சிகா வைரஸ் - பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் பாதிப்பு
x
கேரளாவில் மேலும் 14 பேருக்கு சிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுகாதார ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.திருவனந்தபுரம் அருகே சாலை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிகா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் சிலருக்கு சந்தேகத்தின் பெயரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 14 பேர் சிகா வைரசால் பாதிப்பிற்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆவர். கேரளாவில் முதன் முதலாக சிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ள நிலையில் தாய்க்கும் குழந்தைக்கும் அச்சப்படும் வகையிலான எவ்வித பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்