காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் - ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி?
பயங்கரவாதிகளின் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை அதிநவீன தளவாடங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை அதிநவீன தளவாடங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...ஜூன் 27இல் ஜம்முவில் உள்ள இந்திய விமானப் படையின் தளத்தின் மீது ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். தற்போது இந்திய விமானப்படை வசம், பெரிய வடிவலான ஆளில்லா விமானங்களை எதிர்க்க தேவையான தளவாடங்கள் மட்டுமே உள்ளது.மிகச் சிறிய அளவு கொண்ட, வணிக ரீதியாக பரவலாக பயன்படுத்தப்படும் ட்ரோன்களை எதிர்கொளத் தேவையான தளவாடங்கள் தற்போது இந்திய விமானப்படையிடம் இல்லை.லேசர் கதிர்களை பயன்படுத்தி, ட்ரோன்களை கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட தளவாடங்களை ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, 10 ஆளில்லா விமான எதிர்ப்பு தளவாடங்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்க இந்திய விமானப் படை கோரிக்கை அறிக்கையை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, 10 ஆளில்லா விமான எதிர்ப்பு தளவாடங்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்க இந்திய விமானப் படை கோரிக்கை அறிக்கையை வெளியிட்டது.
Next Story