27-வது நாளாக 5% கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 43 ஆயிரத்து 71 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
x
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 43 ஆயிரத்து 71 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரத்து 433ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 955 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 2 ஆயிரத்து 5ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 299 பேர் கொரோனாவில்  இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 35 கோடியே 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்