தீவிரவாதிகள் ஆட்களை சேர்க்க கேரளாவிற்கு குறி - கேரளா டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தகவல்
தீவிரவாதிகள் ஆட்களை சேர்க்க கேரளாவிற்கு குறி - கேரளா டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தகவல்
தீவிரவாதிகள் ஆட்களை சேர்க்க கேரளாவிற்கு குறி - கேரளா டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தகவல்
தீவிரவாத அமைப்புகள் தங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு, கேரளாவை குறி வைப்பதாக, அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.கேரளாவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, வரும் 30-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் கேரளா காவல்துறை கடுமையாக பணியாற்றி உள்ளதாக கூறினார். தீவிரவாத அமைப்புகள் தங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கேரளாவை குறி வைப்பதாகவும் தெரிவித்தார். கேரளாவில் கற்றறிந்த இளைஞர்கள் இருப்பதால், அவர்களை தங்கள் வசம் இழுப்பதற்கு தீவிரவாத அமைப்புகள் முயற்சிப்பதாகவும் கூறினார். கேரளாவில் தங்க கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் போல புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும் லோக்நாத் பெஹ்ரா தெரிவித்தார்.
Next Story