12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மதிப்பீடு முறை - மாணவர்களுடன் உரையாடிய ரமேஷ் பொக்ரியால்
12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பீடு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பீடு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுடன் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் உரையாடினார். அப்போது, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதம், கொரோனா பாதிப்பு நிலைமை சரியாகும் பட்சத்தில் விருப்பத்திற்கேற்ப தேர்வு நடத்தப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்தார்.
Next Story