டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஆடின. இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி மழையால் தடைபட்டதால், கூடுதல் நாளில் ஆட்டம் தொடர்ந்தது. இதில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால்,139 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, நிதானமாக ஆடி, 45 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. அந்த அணி கேப்டன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன்மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து வென்றது.
Next Story