கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் - மருந்துகள் கட்டுப்பாடு இயக்குநரகத்திடம் சமர்பிப்பு
கோவாக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம், பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கோவாக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம், பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
2021 ஜனவரி 3ஆம் தேதியன்று, கோவேக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகம் அனுமதியளித்தது. அதன் பிறகு பாரத் பயோடெக் உருவாக்கிய இந்த கொரோனா தடுப்பூசி விநியோகம் இந்தியாவில் தொடங்கியது.
முதல் இரண்டு கட்ட சோதனை முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வெளியிடப்படாமலேயே, கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளித்தது சர்ச்சையே ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்துள்ள நிலையில், இந்த தரவுகளை, மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகத்தின் நிபுணர்கள் குழு ஆராய்கிறது.
முதல் இரண்டு கட்ட சோதனை முடிவுகள், புகழ் பெற்ற தி லான்செட் என்ற மருத்துவ ஆய்வுகளுக்கான இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
உலக அளவில் அவசரகால பயன்பாட்டிற்கு, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற விண்ணபிக்கப்பட்டுள்ள நிலையில், புதன் அன்று ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளுடன், பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளை தி லான்செட் மருத்துவ ஆய்வுகளுக்கான இதழில் அடுத்த மாதம் வெளியிட உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story