புதிய சட்ட விதிகளுக்கு உடன்பட மறுப்பு தெரிவித்த ட்விட்டர் - ட்விட்டரை கண்டித்த நிலைக்குழு
ட்விட்டர் நிறுவனம் தனது தனிப்பட்ட கொள்கைகளைவிடவும் இந்தியாவின் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது
புதிய சட்ட விதிகளுக்கு உடன்பட மறுப்பு தெரிவித்த ட்விட்டர் - ட்விட்டரை கண்டித்த நிலைக்குழு
ட்விட்டர் நிறுவனம் தனது தனிப்பட்ட கொள்கைகளைவிடவும் இந்தியாவின் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.சமூக வலைத்தளங்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட விதிகளுக்கு உடன்பட ட்விட்டர் நிறுவனம் மறுத்து வந்ததையடுத்து மோதல் போக்கு அதிகரித்தது. இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கி வந்த சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.மேலும் முன்னாள் அமைச்சர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய நோட்டீசின் பேரில் ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் கம்ரான், ஆயுஷி கபூர் ஆகிய இருவரும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகினர்.அவர்களிடம் குடிமக்கள் பாதுகாப்பு தொடர்பாக சரமாரியான கேள்விகளை நாடாளுமன்ற நிலைக்குழு முன்வைத்தது.இதற்கு பதிலளித்த ட்விட்டர் அதிகாரிகள், தங்கள் நிறுவனத்தின் கொள்கை முடிவுகளை முழுமையாக பின்பற்றுவதாக தெரிவித்தனர்.இந்த பதிலில் திருப்தி அடையாத நிலைக்குழு, இந்தியாவின் சட்டதிட்டங்களை பின்பற்றுவதை ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்தது.
Next Story