மம்தா மீது ஆளுநர் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா மீது ஆளுநர் குற்றச்சாட்டு
x
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் கடிதம் எழுதியிருந்த நிலையில், அக்கடிதத்திற்கு மேற்கு வங்க உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் டெல்லி வந்துள்ள ஜக்தீப் தன்கர், மம்தா பானர்ஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து 6 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், முதல்வர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் மூலம் முதல்வரை வலியுறுத்தினேன் எனவும், ஆனால் அக்கடிதத்திற்கு மேற்கு வங்க உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மேற்குவங்கத்தில் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் தமது அதிகார வரம்பை மீறிவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்