தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிராக் பாஸ்வான் - புதிய செயல் தலைவராக சூரஜ் பன் சிங் தேர்வு
லோக் ஜனசக்தி கட்சியின் தேசியத் தலைவர் சிராக் பாஸ்வான் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சியின் தேசியத் தலைவர் சிராக் பாஸ்வான் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். லோக் ஜன சக்தியில் போர்க்கொடி தூக்கியுள்ள அந்த கட்சியின் எம்பிக்கள், ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், சூரஜ் பன் சிங்கை கட்சியின் புதிய செயல் தலைவராகவும் தேர்தல் அதிகாரியாகவும் தேர்வு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கட்சியின் தேசிய நிர்வாகியை அழைத்து ஐந்து நாட்களுக்குள் புதிய தலைவருக்கான தேர்தலை நடத்துமாறு கேட்டுள்ளனர் .இதன் தொடர்ச்சியாக, பசுபதி குமார் பராஸ், விரைவில் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story