மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமலில் உள்ள மாநிலங்கள், தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள மாநிலங்கள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.
12 மாநிலங்கள் மற்றும் 2 யுனியன் பிரதேசங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 17 மாநிலங்களில் மாற்றம் இன்றி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, ராஜஸ்தான், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், லடாக், மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, உத்தரகாண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தளர்வுகள் எதுவும் இன்றி முழு ஊரடங்கு தொடர்கிறது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜம்மு காஸ்மீர், டெல்லி, மஹாராஷ்ட்ரா, இமாச்சல் பிரதேசம், பீகார், கேரளா, குஜராத், பஞ்சாப், ஹரியானா, மணிப்பூர், மிசோராம் மற்றும் மேகாலயாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல்வேறு
அளவுகளில் தளர்த்தப்பட்டுள்ளன.
Next Story