கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பூசி உற்பத்தி தொடக்கம் - மத்திய அமைச்சர் தகவல்

கருப்புப் பூஞ்சை நோய்க்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பூசி உற்பத்தி தொடக்கம் - மத்திய அமைச்சர் தகவல்
x
கருப்புப் பூஞ்சை நோய்க்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின் பி ஊசியை தயாரிக்க தொடங்கி உள்ளதாகவும், வரும் திங்கள்கிழமை முதல் இந்த தடுப்பூசி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ஆயிரத்து 200 எனவும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அலுவலக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தடுப்பூசி தயாரிக்க 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகில் எங்கு இந்த தடுப்பூசி கிடைத்தாலும் வாங்கி அனுப்ப, தூதரகங்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இருப்பதை அறிந்து, அங்கிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 1,21,000 குப்பிகள் இந்தியா வந்து உள்ளதாகவும், மேலும் 85,000 குப்பிகள் ஓரிரு நாளில் வந்து சேரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 10 லட்சம் குப்பிகளை அந்த நிறுவனம் அனுப்ப உள்ளதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்