குறையாத கொரோனா தாக்கம்.. கேரளாவில் பரவும் பரவும் கருப்பு பூஞ்சை நோய்
கேரளாவில் கொல்லம், மலப்புரம் ,கோட்டயம் ஆகிய பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறையாத கொரோனா தாக்கம்.. கேரளாவில் பரவும் பரவும் கருப்பு பூஞ்சை நோய்
கேரளாவில் கொல்லம், மலப்புரம் ,கோட்டயம் ஆகிய பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கொல்லத்தில் பூயப்பள்ளியை சேர்ந்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே போல மலப்புரம் பகுதியில் அப்துல் காதருக்கு கண்களில் இருந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு அறுவை சிகிச்சை செய்து அகற்ற பட்டதாக தெரிகிறது. இவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக மஞ்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம் தேதி கருப்பு பூஞ்சை இருப்பது தெரியவந்தது. இதே போல கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே கொரோனா நோயின் தாக்கம் கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story