கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டெல்லியில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்தது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கிடைக்காமல், நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து, முழு ஊரடங்கை டெல்லி அரசு கடுமையாக அமல்படுத்தியதால், படிப்படியாக கொரோனா தொற்று குறைய ஆரம்பித்து, கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, கொரோனா தொற்று பரவல் விகிதம் 11% ஆகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவராக இருந்தால், அவர்கள் குடும்பத்திற்கு மாதம்தோறும் 2,500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு 25 வயது வரையில், மாதம்தோறும் 2500 ரூபாய் நிவாரணத்துடன், இலவசக் கல்வியும் வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Next Story