நாடு மருத்துவர்களுக்கு கடன் பட்டுள்ளது; டெலி மெடிசின் சேவை தேவை - பிரதமர் அறிவுரை
ஒட்டுமொத்த நாடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கடன் பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
ஒட்டுமொத்த நாடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கடன் பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக முன்னணி மருத்துவர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஒட்டுமொத்த நாடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கடன் பட்டுள்ளதாக நன்றி தெரிவித்தார். நாட்டிலுள்ள 90 சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டதால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். , இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள், மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அனைத்து தாலுகா மற்றும் மாவட்டங்களில் டெலி மெடிசின் சேவை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு டெலிமெடிசின் நல்ல பயனைத் தருவதாக கூறிய பிரதமர் மருத்துவர்கள் தங்களது அன்றாட முயற்சியின் ஒரு பகுதியாக ஆக்சிஜன் தணிக்கையும் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.
Next Story