லஞ்ச குற்றச்சாட்டு வழக்கு; மேற்கு வங்க அமைச்சர்கள் கைது - முதல்வர் மம்தா ஆவேசம்
லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்களை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறி உள்ளார்.
லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்களை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறி உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக, செய்தி நிறுவனம் ஒன்று வீடியோ வெளியிட்டது. இது தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள், ஃபிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, அக்கட்சி எம்.எல்.ஏ மதன் மித்ரா மற்றும் நிர்வாகி சோவன் சாட்டர்ஜி ஆகியோரை இன்று மேற்கு வங்கத்தில் கைது செய்தது. தகவலறிந்து சிபிஐ அலுவலகத்துக்கு சென்ற அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அமைச்சர்களின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகளை கைது செய்ய முடியாது என்றும், தனது அதிகாரிகளை கைது செய்தால், தன்னையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து உள்ளார்.
Next Story