ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி; இந்தியாவில் மேலும் ஒரு நிறுவனம் தயாரிப்பு
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் மேலும் ஒரு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் மேலும் ஒரு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தியாவில், ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம், அதை தயாரிப்பதற்கான அனுமதியை பெற்றது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த ஷில்பா மெடிக்கேர் மருந்து தயாரிப்பு நிறுவனமும், ஸ்புட்னிக் - வி கொரோனா தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் செய்து உள்ளது. அடுத்த, 12 மாதங்களில், 50 மில்லியன் தடுப்பூசி குப்பிகள் தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
Next Story