மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்
கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.
மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்
கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.கேரளாவில் இது வரை எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாறிமாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த முறை இடது முன்னணி 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து 2 - வது முறையாக அரியணையில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை இடது முன்னணிக்கு கிடைத்து உள்ளது.இந்நிலையில், தற்போதுள்ள அமைச்சரவை, முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அதன்படி முதல்வர் பினராயி விஜயன் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைப்பது குறித்து பினராயி விஜயன் ஆலோசனை நடத்துகிறார். புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இடது ஜனநாயக முன்னணி சார்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story