நாளை முதல் வங்கி வேலை நேரம் குறைப்பு

தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
x
தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை  தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணி , மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்கலாம் என்றும் ஆதார் பதிவு மையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என்றும் வங்கி வருவதை தவிர்க்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்