"தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்" மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
"தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்" மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
"தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்" மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி வழங்கும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு ஒரு டோசை 150 ரூபாய்க்கும், மாநில அரசுக்களுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 3 விதமான விலை நிர்ணயத்திற்கு பல தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு டோசுக்கு 600 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்ட தடுப்பூசிக்கு பிற உலக நாடுகளில் உள்ள விலையைவிட அதிகம் என காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய அரசு 150 ரூபாய்க்கு வாங்கும் தடுப்பூசியை தொடர்ந்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என தெரிவித்துள்ளது.
Next Story