தடுப்பூசி - கேரள அரசு விதித்த கட்டுப்பாடுகள்

தடுப்பூசி - கேரள அரசு விதித்த கட்டுப்பாடுகள்
தடுப்பூசி - கேரள அரசு விதித்த கட்டுப்பாடுகள்
x
தடுப்பூசி - கேரள அரசு விதித்த கட்டுப்பாடுகள்

கேரளாவில் இன்று வியாழக்கிழமை முதல் ஆன்லைன் பதிவு மூலம் மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வழிகாட்டுதல்களை, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்டார்.அதில், வியாழக்கிழமை முதல், ஆன்லைன் பதிவு மூலம் மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும், உடனடி பதிவு கிடையாது என்று தெரிவித்துள்ளது.முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி போட, மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கிடைப்பது குறித்த தகவலை மாவட்ட நிர்வாகம்,  முன்கூட்டியே இணையதளத்தில் உறுதி செய்ய  வேண்டும் என்றும்,கொரோனா தடுப்பூசி மையங்களில் வரிசையைத் தவிர்ப்பதற்காக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.அந்தந்த தடுப்பூசி மையங்களில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி கிடைப்பதற்கு ஏற்ப திட்டமிடவும், அது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்,முதல் மற்றும் 2-வது கொரோனா தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும்,முதல் டோஸ் எடுத்துக்கொண்ட முன்களப்பணியாளர்களுக்கு, இரண்டாவது டோஸ் வழங்கப்பட வேண்டும் என, வழிகாட்டுதல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்