கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"
கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"
கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"
இனி தயாரிக்கப்படும் ஆறு கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் பெரும்பகுதி, மகாராஷ்டிரா மாநிலத்திற்கே வழங்கப்படும் என, சீரம் நிறுவனத் தலைவர் ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைருவருக்கும் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் தடுப்பூசி வழங்க முடிவு எடுத்து அது தொடர்பான ஏற்பாடுகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனாவாலா, அடுத்த சில மாதங்களில், கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளார். சீரம் நிறுவனம் மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் இருப்பதால், தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில், பெரும்பகுதி,அந்த மாநிலத்திற்கே, முதலில் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் குறிபிட்டுள்ளார். அதன் பிறகே, டெல்லி, உள்ளிட்ட பிற மாநில அரசுகளுக்கு, தடுப்பூசிகளை, 400 ரூபாய் விலையுடன் வழங்க திட்டமிட்டிருப்பதாக சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு பெரும்பகுதி தடுப்பூசிகள் வழங்கப்படும் என ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story