"லோக் ஆயுக்தா தீர்ப்பில் பிழை இல்லை" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
"லோக் ஆயுக்தா தீர்ப்பில் பிழை இல்லை" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
"லோக் ஆயுக்தா தீர்ப்பில் பிழை இல்லை" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
கேரள மாநில முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல், லோக் ஆயுக்தா வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கேரள மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.டி.ஜலீல், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த லோக் ஆயுக்தா, ஜலீல் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் என்றும், அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் எனவும் தீர்ப்பளித்தது. இதற்கு தடை விதிக்கக் கோரிய ஜலீலின் மனுவை, கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஜலீல், லோக் ஆயுக்தா தீர்ப்புக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், லோக் ஆயுக்தாவின் தீர்ப்பில் பிழைகள் இல்லை என தெரிவித்தனர். மேலும், லோக் ஆயுக்தா இந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்துள்ளதாக கூறிய நீதிபதிகள், ஜலீலின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.
Next Story