ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி - மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
x
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனம் இந்தியாவில் ஸ்புட்னிக்கை பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசின் நிபுணர் குழு இது குறித்து ஆலோசித்தது. இதன் அடிப்படையில், ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையின் மீது இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்