சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு குறித்தான அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
x
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு குறித்தான அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2021-22-ம் நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான முதல் காலாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.அதில் ஓராண்டு கால வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும்,தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைத்து 5.9 சதவீதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.இதுபோன்று பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்ட வட்டி விகிதம்  7.6 சதவீதத்தில் இருந்து 6.9 ஆக குறைக்கப்பட்டது.கிசான் விகாஸ் பத்திரங்களின் ஆண்டு    வட்டி விகிதம் 6.9 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக்கப்பட்டது.இந்நிலையில் கவனக்குறைவால் வெளியிடப்பட்ட வட்டி விகித குறைப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், 2020 - 21 நிதியாண்டின் கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதங்கள் அப்படியே தொடரும் எனக் தெரிவித்துள்ளார்.






Next Story

மேலும் செய்திகள்