தமிழக அரசு சிறப்பான செயல்பாடு : கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ஆளுநர் நன்றி
கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு, ஆளுநர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றியதாகவும் அவர் பாராட்டினார்.நிவர், புரெவி புயல்கள் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டதாகவம் ஆளுநர் கூறினார்.கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,715 கோடி நிவா ரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
Next Story