மாநில சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி - "இன்று முதல்100% வருகைப் பதிவு கட்டாயம்"
தேர்தல் ஆணைய பணியாளர்களுக்கு 100 சதவீத வருகைப் பதிவை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது .
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், தேர்தல் ஆணைய பணியாளர்களுக்கு 100 சதவீத வருகைப் பதிவை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இருப்பினும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தலில், உள்ள பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்து வீட்டிலேயே இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல் போன்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பணியாளர்கள் முறையாக கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story