கோவிஷீல்டு - சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்குமா?"
கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இங்கிலாந்தைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்து உள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை புனேயில் தயாரிக்கும் பணியில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தடுப்பு மருந்து இறுதிக் கட்ட சோதனையில் உள்ள நிலையில், அதனை அவசர கால அடிப்படையில் பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம், அந்த நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது.
லண்டன், பிரேசில் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், கோவிஷீல்டு மிகச் சிறப்பான முடிவுகளை அளித்திருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கோரியுள்ளது. தற்போது அந்த நிறுவனத்தில் 40 லட்சம் கோவி ஷீல்டு தடுப்பு மருந்து கைவசம் உள்ளது. ஏற்கனவே, ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்த நிலையில், சீரம் நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைக்கும் நிலையில் கோவி ஷீல்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story