வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை
மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், மறு உத்தரவு வரும் வரை அனுமதி நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தங்களது மருந்துகள் இறக்குமதி உரிமத்தை ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்குமாறு மருந்து நிறுவனங்கள் கோரிக்கை வைத்ததாகவும், அதை பரிசீலித்த அமைச்சகம் அடுத்த உத்தரவு வரும் வரை உரிமங்களை நீட்டிப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால், தற்போதைய உரிமங்கள் காலாவதியாகும் முன், உரிமம் நீட்டிப்புக் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
Next Story