சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்த கேரள அரசை கண்டித்து, வரும் 25 ஆம் தேதி ஐயப்ப நாம ஜெப வேள்வி நடைபெறும் என ஐயப்பா சேவா சமாஜம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 16 ஆம் தேதி காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மாநில அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதித்து வருகிறது. வார நாட்களில் ஆயிரம் பேர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பேர் மட்டுமே சன்னிதானம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பம்பையில் குளிக்க கூடாது, நெய்யபிஷேகம் நடத்த முடியாது மற்றும் உரல்குழி தீர்த்தத்தில் குளிக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஐயப்பா சேவா சமாஜ தலைவர் இலந்தூர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.
Next Story