சூடு பிடித்துள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - தொண்டர்கள் புடை சூழ பாஜக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.
பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. பாஜக- ஜேடியூ கூட்டணியில் ஜேடியூ 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பல்வேறு கட்சியினரும், தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். முசாஃபர்பூரில் பாஜக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்த போது, கும்பலாக வந்த பாஜக தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால், அக்கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Next Story