ஓட்டலில் மெனு கார்டு வழங்காததால் தகராறு - ஓட்டலில் பொருட்களை உடைத்து தீ வைப்பு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஹோட்டலில் மெனு கார்டு வழங்கவில்லை என கூறி தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், அதன் உரிமையாளரை தாக்கி தீ வைத்து கொளுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஓட்டலில் மெனு கார்டு வழங்காததால் தகராறு - ஓட்டலில் பொருட்களை உடைத்து தீ வைப்பு
x
சதாசிவ ரெட்டி என்பவர் நடத்தி வரும் ஓட்டலில்  முஷிராபாத்தை சேர்ந்த  சுமன் தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது, மெனு கார்டு வேண்டும் என அங்கு பணிபுரியும் தீபக்கிடம் கேட்டுள்ளார். மெனு கார்டு பயன்படுத்துவது இல்லை என அவர் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சுமன் மற்றும் அவரது நண்பர்கள்  நாற்காலிகளை வீசி மேலாளரை மிரட்டிவிட்டு சென்றனர்.  இரவு 10 மணியளவில் சுமன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று ஓட்டல் உரிமையாளரின் மகன் பர்வேஷ் ரெட்டி, ஊழியர் தீபக்கை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு டி.வி.க்கள், ஒரு குளிர்சாதன பெட்டி, கண்ணாடி மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்