மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்ற வழக்குகள்: விரைந்து விசாரித்து முடித்தால் எதையும் வரவேற்போம் - மத்திய அரசு
முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்கு விசாரணையின் எவ்வித உத்தரவுகளையும் வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை தேர்தலில் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்கக் கோரியும், வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரியும் அஸ்வினி உபாத்தியா பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அது, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.-களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதிமன்றங்களுக்கு கால அளவை விதிக்கலாம் என மத்திய அரசு கூறியது. அவ்வாறான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்த நிலையில், ஆயுள் தண்டனை, ஏழாண்டுக்கு மேல் தண்டனை பெறும் குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரிந்துரை செய்தார்.
Next Story